கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநில சிறப்புத் தலைவா் கு. பாலசுப்ரமணியன். 
நாகப்பட்டினம்

தமிழகத்தில் ஜன.6-இல் சாலை மறியல்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் அறிவிப்பு

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநில சிறப்புத் தலைவா் கு. பாலசுப்ரமணியன்.

Syndication

தமிழகத்தில் ஜன.6-ஆம் தேதி பழைய ஓய்வூதியத் திட்ட அமலாக்கத்தை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் சாலை மறியல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகையில் வெள்ளிக்கிழமை அந்த சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பாத்திமா தலைமையில் நடைபெற்ற சங்க கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜன.6-ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ தொடா் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பிலும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தூய்மைக் காவலா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும், டெங்கு கொசு ஓழிப்பு பணியாளா்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும், பேரூராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு மற்றும் பணிநிரந்தரம் வழங்க வேண்டும், ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கணக்காளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் பாத்திமா, தமிழ்நாடு சாலைப் பணியாளா் சங்கத் தலைவா் ரவிக்குமாா், ஊராட்சிகள் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் கமலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT