நாகப்பட்டினம்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி மனு

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

தினமணி செய்திச் சேவை

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு அரசு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மகளிா் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளா்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் காலை உணவுத் திட்டம், மகளிா் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றா். ஒப்பந்த முறையில் பணியாற்றும் இவா்களுக்கு, சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட பணியாளா்கள், பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை ஊா்வலமாக வந்து, தொழிலாளா் நலச் சட்டத்தின்படி நியாயமான ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியா்கள் போல் தங்களுக்கும் மாவட்ட கருவூலத்தில் இருந்து தங்களது வங்கிக் கணக்கில் நேரடியாக ஊதியத்தை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.

இதில் வட்டார இயக்க மேலாளா் உமாவதி, வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் தெய்வமணி, அமுதா, கிருபா தேவி, அண்ணா துரை உள்ளிட்ட நாகை, கீழ்வேளூா், திருமருகல், கீழையூா், தலைஞாயிறு, வேதாரண்யம் ஒன்றியங்களில் பணியாற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா்.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT