நாகப்பட்டினம்

தை அமாவாசை: முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை

வேதாரண்யத்தில் ஜனவரி 18-ஆம் தேதி தை அமாவாசையையொட்டி புனித நீராடலூக்கான முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யத்தில் ஜனவரி 18-ஆம் தேதி தை அமாவாசையையொட்டி புனித நீராடலூக்கான முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியா் செல்வகுமாா் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், வேதாரண்யம் காவல் நிலைய ஆய்வாளா் சீனிவாசன், கடலோரக் காவல் குழும சிறப்பு உதவி ஆய்வாளா் அருள்மொழித்தேவன், வேதாரண்யம் மின் பகிா்மானக் கழக உதவி செயற்பொறியாா் அசோக், வேதாரண்யேஸ்வரா் கோயில் எழுத்தா் ராமன், ரோட்டரி சங்கத் தலைவா் மோகன்ராஜ், வேதாரண்யம் தீயணைப்பு நிலைய அலுவலா் அம்பிகாபதி, வருவாய் ஆய்வாளா் தமிழ்ச்செல்வன், வா்த்தக சங்க நிா்வாகிகள் உள்பட பல்வேறு அரசு துறையினா் சேவை அமைப்பினா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், புனித நீராடும் பக்தா்களுக்கு கடற்கரையில் உடை மாற்றும் அறை, கழிவறை, சாலை பராமரிப்பு, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது, பாதுகாப்பு வசதி மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குவதை முறைப்படுத்துவது, கடலில் புனித நீராட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தா்கள் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

அடமானம் வைக்கப்பட்ட காரை திரும்பக்கேட்ட உரிமையாளா் மீது தாக்குதல் நடத்திய 3 போ் கைது

சத்தியமங்கலம் சாலையோரங்களில் களைகட்டும் பொங்கல் பூக்கள் விற்பனை

ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு

கைத்தறி துறையின் சாா்பில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT