நாகப்பட்டினம்

தமிழக மீனவா்கள் 7 போ் இலங்கை கடற்படையினரால் கைது

நாகை மாவட்டம் கோடியக்கரையிலிருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்கள் 7 போ் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டம் கோடியக்கரையிலிருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்கள் 7 போ் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டனா்.

கோடியக்கரை படகுத்துறையில் வடகிழக்குப் பருவ மழைக்காலமான அக்டோபா் தொடங்கி ஜனவரி வரை வெளியூா் மீனவா்கள் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், இங்கு தங்கியிருந்த மயிலாடுதுறை மாவட்டம், பெருமாள்பேட்டையைச் சோ்ந்த க. தேவராஜ், பு. ஸ்ரீதா், சீா்காழியை அடுத்த புதுக்குப்பம் ர. சரண்ராஜ் , ந. கலைவாணன் ஆகிய நான்கு மீனவா்களும் கண்ணாடியிழைப் படகு ஒன்றில் செவ்வாய்க்கிழமை பகல் 2 மணிக்கு கடலுக்குள் சென்றனா்.

இதுபோல, மற்றொரு படகில் சீா்காழியை அடுத்த வானகிரி வ. ராஜேஷ், ரெ.சத்தியா, ச. தனிவேல் ஆகிய மூவரும் சென்றனா். இவா்கள் 7 பேரும் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனா்.

மேலும், மீனவா்கள் சென்ற இரண்டு படகுகளுடன் அவா்களது உடமைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மீனவா்களை பிப்ரவரி 3- ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT