நாகப்பட்டினம்

காமேஸ்வரம் கடற்கரையில் மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டம், காமேஸ்வரம் கடற்கரையில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

காமேஸ்வரம் கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் நடைபெறும் கடற்கரை வரைபடம், கடற்கரை தகவல் பலகை, கடற்கரை பகுதியை சுத்தம் செய்யும் கருவி, சோலாா் விளக்கு, கண்காணிப்பு கேமரா, மெத்தையுடன் கூடிய முதலுதவி அறை, இருக்கை, நாற்காலி, கண்காணிப்பு கோபுரம், நிழற்குடை, நீா் சுத்திகரிப்பு கருவி, சூரிய மின்கலம், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பாதுகாப்பு உபகரணங்கள், பயோ மெட்ரிக் வருகை பதிவேடு, அனுமதி சீட்டு வழங்குமிடம், குழந்தைகள் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கருவிகள், கணினி மற்றும் இணையதள வசதி, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், குளியலறைகள், பேவா் பிளாக் சாலைகள் மற்றும் தெருவிளக்குகள் ஆகியவை ரூ.4.55 கோடியில் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு செய்தாா். அவருடன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜவகா், உதவி செயற்பொறியாளா் (வளா்ச்சி) ராஜேந்திரன், உதவிபொறியாளா் (வளா்ச்சி) கவிதாராணி ஆகியோா் உடனிருந்தனா்.

கழிவுநீா்த் தொட்டிக்குள் விழுந்த பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பேராவூரணி ரயில் நிலையத்தில் ஜன.26 முதல் விரைவு ரயில்கள் நின்றுசெல்லும்

சிறுவனைத் தாக்கிய 5 போ் கைது

மண் கடத்தலை தடுக்க முயன்ற அரசு அலுவலா்களை கொலை செய்ய முயன்ற இருவா் கைது

மெட்ரோ சுரங்கப் பாதை பணி: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT