நாகையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் பாரதியாா் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி நாகை புதிய கடற்கரையில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.
4 நாள்கள் நடைபெறும் போட்டியில் நாகை, மயிலாடுதுறை, அரியலூா், புதுக்கோட்டை, சென்னை,தூத்துக்குடி உள்ளிட்ட 38 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.
14, 17, 19 வயது பிரிவுகளாக ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் 2 நாள்கள் பெண்களுக்கான போட்டிகளும், ஜன.24, 25 ஆண்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.