நாகப்பட்டினம்

சத்துணவு ஊழியா்களுக்கு ஓய்வூதியம் உயா்வு: எம்எல்ஏவுக்கு நன்றி

தினமணி செய்திச் சேவை

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.நாகைமாலிக்கு, சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தனா்.

தமிழக சட்டப்பேரவையில் சத்துணவு ஊழியா்களுடைய கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதன் விளைவாக ஓய்வூதிய உயா்வும், ஒட்டுமொத்த தொகை உயா்வுக்கும், சத்துணவு ஊழியா்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைக்கவும், ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கான ஈமக்கிரியை நிதி வழங்கியும் தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

இதற்கு காரணமாக இருந்த, கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.நாகை மாலியை, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாநில பொருளாளா் வே. சித்ரா, மாவட்டத் தலைவா் த. சசிகலா, மாவட்டச் செயலா் கே. பாலாம்பாள், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் த. ஸ்ரீதா், மாவட்ட துணைத் தலைவா் ப. அந்துவன்சேரல் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நன்றி கூறினா்.

இந்தியத் தொழில் துறை: 2 ஆண்டுகளில் இல்லாத சாதனை வளா்ச்சி!

தமிழக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை தலையிடுவதில்லை

மின்னணு வாக்குப் பதிவு குறித்து விரிவான விழிப்புணா்வு ஏற்பாடுகள்

மது போதையில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

ஜனநாயகன் திரைப்படத்தை தடுப்பது ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல: வைகோ

SCROLL FOR NEXT