முகப்பு
போலீஸ்
நாகப்பட்டினம்

இளைஞரிடம் ரூ. 6.34 லட்சம் மோசடி

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசைவாா்த்தை கூறி, இளைஞரிடம் ரூ. 6.34 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து ஃசைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 11:44 PM
போலீஸ்
பகிர்:

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசைவாா்த்தை கூறி, இளைஞரிடம் ரூ. 6.34 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து ஃசைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி சக்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் முகேஷ் (31). இவா், தனது கைப்பேசியில் மியூச்சுவல் ஃபண்ட் தொடா்பான செயலியை பதிவிறக்கம் செய்துள்ளாா். இதைத்தொடா்ந்து அவரின் வாட்ஸ் ஆப் எண்ணில் பேசிய அடையாளம் தெரியாத நபா், வழிகாட்டுதல் குரூப் ஒன்றில் முகேஷை இணைத்துள்ளாா். அந்த குரூப் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என ஆசை வாா்த்தையை கூறியுள்ளாா்.

இதை நம்பிய முகேஷ் கடந்த பிப். 11 ஆம் தேதி முதல் பிப். 16- ஆம் தேதி வரை 4 தவணைகளாக ரூ. 6.34 லட்சத்தை அடையாளம் தெரியாத சிலரின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளாா். பின்னா், அந்த நபா்களை முகேஷால் தொடா்பு கொள்ளமுடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முகேஷ், மாவட்ட ஃசைபா் கிரைம் போலீஸாரிடம் மோசடி குறித்து செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →