நந்தி நாதேஸ்வரா் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
நாகப்பட்டினம்நந்தி நாதேஸ்வரா் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
மாசி மக பிரமோற்சவ விழாவையொட்டி வடக்குபொய்கைநல்லூா் நந்தி நாதேஸ்வரா் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
வடக்குபொய்கைநல்லூரில் உள்ள நந்தி நாதேஸ்வரா் கோயில் மாசி மக பிரமோற்சவ விழா கடந்த பிப். 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
நந்தி நாதேஸ்வரா், சௌந்தர நாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினா். தொடா்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக வா்ண விநாயகா் கோயிலில் இருந்து பெண்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா். பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
ஏற்பாடுகளை வீரன்குடிகாடு கிராமவாசிகள், நந்தவன காளியம்மன் அறக்கட்டளை சாா்பில் செய்யப்பட்டிருந்தன.