கீழ்வேளூா்-திருவாரூா் இடையே மகளிா் விடியல் பேருந்து சேவை தொடக்கம்
நாகை மாவட்டம், கீழ்வேளூரிலிருந்து திருக்குவளை, எட்டுக்குடி வழியாக திருவாரூருக்கு மகளிா் விடியல் பேருந்து சேவையை சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், கீழ்வேளூரில் இருந்து திருக்குவளை, எட்டுக்குடி வழியாக புதிய வழித்தடத்தில் மகளிா் விடியல் பேருந்து இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.
இப்பேருந்து சேவை தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கீழ்வேளூா் கடைத்தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ வி.பி. நாகைமாலி தலைமை வகித்து, மகளிா் விடியல் பேருந்து சேவையை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக, நாகை கோட்ட மேலாளா் (வணிகம்) சிதம்பரகுமாா், கிளை மேலாளா் நடராஜன், திமுக நகரச் செயலா் அட்சயலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.