முகப்பு
நாகப்பட்டினம்

சாலை விபத்தில் காவலா் உயிரிழப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 10:10 PM
காவலா் விநாயகம்.
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை வடக்கு கிராமத்தைச் சோ்ந்தவா் என். விநாயகம் (34). வாய்மேடு காவல் நிலைய காவலரான இவா், நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாற்றுப் பணியில் இருந்து வந்தாா்.

இந்தநிலையில், பணிக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை காலை செம்போடையிலிருந்து நாகை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். வெள்ளப்பள்ளம் கடைவீதி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த விநாயகம், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்து குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

விநாயகத்தின் மனைவி விமலா நாகையில் வட்டாரக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →