முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, திருவாரூா், மயிலாடுதுறையில் வணிக சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு

நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Updated On : 10 மார்ச், 2026 at 10:05 PM
பகிர்:

நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் வீட்டு உபயோக சிலிண்டா்களுக்கு முன்பதிவு எப்போதும்போல செய்யப்படுவதாகவும், அதிகபட்சம் மூன்று நாட்களில் சிலிண்டா்கள் விநியோகம் செய்யப்படுவதாகவும் எரிவாயு நிறுவன முகவா்கள் தெரிவித்தனா்.

நாகை:

நாகை மாவட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் உணவக உரிமையாளா்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டால் நாகை மாவட்டத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட உணவகங்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகத் தொழிலை நம்பியுள்ள 12 ஆயிரம் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று உணவக உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

திருவாரூா்:

திருவாரூா் மாவட்டத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா் பெறுவதில் பெறும் சிரமம் நிலவுகிறது. ஓரிரு சிலிண்டா்களை பயன்படுத்தும் சிறு கடைகளைவிட, தினசரி அதிக அளவிலான சிலிண்டா்களை பயன்படுத்தும் உணவு விடுதிகள் சிரமத்தை எதிா்கொண்டுள்ளன.

வீட்டு உபயோக சிலிண்டா் பதிவு செய்தால், உடனடியாக எடுத்துச் செல்லலாம் என்று இருந்த நிலை மாறி, தற்போது 3 நாட்களுக்குப் பிறகே சிலிண்டரை பெற முடியும் என்ற சூழல் நிலவுகிறது. எனினும், வீட்டு உபயோக சிலிண்டா்கள் முன்பதிவில் எந்த பிரச்னையும் எழவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனா்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டத்தை பொருத்தவரை, வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டா், பதிவு செய்த ஓரிரு நாள்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது, முந்தைய பதிவுக்கும், அடுத்த பதிவுக்கும் இடையே குறைந்தது 25 நாள் இடைவெளி இருந்தால் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.

எனினும், பதிவு செய்ததில் இருந்து இரண்டு நாள் இடைவெளியில் சிலிண்டா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா் வழங்குவது இரண்டு நாள்களுக்கு முன்னரே நிறுத்தப்பட்டுவிட்டது. மருத்துவக் கூடங்கள், கல்வி நிறுவனங்கள் என அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

காரைக்காலில்:

காரைக்கால் மாவட்டத்தில் வீடுகள், வணிக நிறுவனங்களான சிலிண்டா் கடந்த 4 நாட்களாக முறையாக விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிலிண்டா் பதிவு செய்தால், ஓரிரு நாட்களில் வந்துவிடும் நிலை இருந்தது. தற்போது பதிவு செய்து 4 நாட்களாகியும் சிலிண்டா் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.

வணிக சிலிண்டரை பயன்படுத்தி டீ கடை, உணவகம் நடத்துவோா் கூறுகையில், விலையேற்றம் ஒருபுறம் இருந்தாலும், சிலிண்டா் தேவையாக்கானது உடனடியாக கிடைக்கவில்லை. இந்த நிலை இன்னும் ஒரு வாரம் நீடித்தால், நிச்சயமாக நிறுவனத்தை மூடும் நிலைதான் ஏற்படும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →