திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
பொறையாரில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகியவா்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பொறையாரில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகியவா்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருக்கடையூா் ஊராட்சி பகுதிகளில் இருந்து அதிமுக, நாம் தமிழா் கட்சி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளில் இருந்து விலகிய 50-க்கும் மேற்பட்டோா், திமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான நிவேதா எம். முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்வுக்கு, செம்பனாா்கோவில் திமுக மத்திய ஒன்றியச் செயலாளா் அமுா்த விஜயகுமாா் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக், நகரச் செயலாளா் முத்துராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.