நாகை மாவட்டத்தில் 11 நாட்களில் ரூ.57.32 லட்சம் பறிமுதல்
நாகை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் கண்காணிப்புக் குழுவினா் மூலம் 11 நாட்களில் ரூ. 57.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் கண்காணிப்புக் குழுவினா் மூலம் 11 நாட்களில் ரூ. 57.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் தேதி கடந்த 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மாநிலம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லும் ரொக்கம், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பொருள்களும் வாகனத்துடன் பறிமுதல் செய்யப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.
மேலும் முறைகேடுகளை தடுக்கவும், பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதை தடுக்கவும், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தோ்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தனித்தனியாக தோ்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவினா் மூன்று தொகுதிகளுக்குப்பட்ட பகுதிகளில் நாள்தோறும் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.
இதன்படி, மாா்ச் 16-ஆம் தேதி முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை 11 நாட்களில் வாகனத் தணிக்கை மற்றும் சோதனை மூலம் ரூ. 57, 31, 995 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.