முகப்பு
நாகப்பட்டினம்

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

நாகை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

Updated On : 28 மார்ச் 2026, 2:39 am IST
பகிர்:

நாகை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூா் தெற்கு தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சந்தோஷ் (26), சின்ராஜ் மகன் மனோஜ் (26). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தனராம்.

நாகை கிழக்கு கடற்கரைச் சாலையில் கருவேலங்கடை பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சந்தோஷ், மனோஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

நாகை நகர போலீஸாா் சடலங்களை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.