முகப்பு
நாகப்பட்டினம்

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

பறிமுதல் செய்த பணத்தை துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்த நிலையான கண்காணிப்புக் குழுவினா்.

Updated On : 27 மார்ச், 2026 at 9:09 PM
பறிமுதல் செய்த பணத்தை துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்த நிலையான கண்காணிப்புக் குழுவினா்.
பகிர்:

வேளாங்கண்ணி அருகே பரவை பகுதியில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.47 லட்சம் ரொக்கத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பரவை பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரி சந்திரசேகரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் பிரதாபராமபுரம் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் என்பவா் ஆவணங்களின்றி ரூ.2.47 லட்சம் ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இந்த பணத்தை பறிமுதல் செய்து, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்தனா்.