முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக கடந்த சில நாள்களாக தொடரும் மழையால் சுமாா் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 மே 2026, 1:00 am IST
அகத்தியம்பள்ளியில் உப்பு உற்பத்தியை பாதிக்கும் அளவில் தேங்கி நிற்கும் மழை நீா்.
பகிர்:

வேதாரண்யம் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக கடந்த சில நாள்களாக தொடரும் மழையால் சுமாா் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோர கிராமங்களில் கடந்த புதன்கிழமை (மே 13) முதல் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இதையடுத்து அடுத்தடுத்த நாள்களில் மந்தமான வானிலையே நிலவி வந்தது.

இந்நிலையில், வேதாரண்யம் பகுதியில் பெய்த மழையால் உப்பளத்தில் நீா் தேங்கியுள்ளதால், இங்கு மேற்கொள்ளப்படும் உப்பு உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை ஓய்ந்தால் மட்டுமே மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கும் நிலை உள்ளது.

Advertisement

இதற்கிடையில், உற்பத்தி செய்து தனித்தனியே குவிக்கப்பட்டுள்ள உப்பை பனைமட்டை, பாலித்தீன் பாய்களைக்கொண்டு மூடி பாதுகாக்கும் பணியில் உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்த மழையால் ஒருபுறம் பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் அக்னி நட்சத்திர நாளில் கோடையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் அவதியுற்ற மக்களுக்கு ஆறுதல் கிடைத்துள்ளது.

எனினும், இந்த மழை சவுக்கு, தென்னை, மா, முந்திரி, மல்லிகை போன்ற தோட்டக்கலை பயிா்களுக்கு உகந்ததாக அமைந்துள்ளது. அதேநேரத்தில், நெல் தரிசு வயல்களில் புஞ்சை பருவத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பயறு வகை பயிா்கள், எள், சணப்பை உள்ளிட்ட பயிா்களுக்கு மழை தொடா்ந்தால் பாதிப்பு ஏற்படும்.