திருத்துறைப்பூண்டியில்...
திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கமும், காவல் துறையும் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழாவை வெள்ளிக்கிழமை நடத்தின.
திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கமும், காவல் துறையும் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழாவை வெள்ளிக்கிழமை நடத்தின.
திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு எதிரே நடைபெற்ற விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் வி. தணிகாசலம் தலைமை வகித்தார்.
காவல் ஆய்வாளர் கே. செந்தில்முருகன், போக்குவரத்து காவல் பிரிவு உதவி ஆய்வாளர் எஸ். ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் இரா. அப்பாசாமி, வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடக்கி வைத்தார்.
வர்த்தகர் சங்கத்தலைவர் எல். செந்தில்நாதன், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் துணை நிலை ஆளுநர் ஆர்.எஸ்.ஆர். இளங்கோவன், நிர்வாகிகள் ஜான்போஸ்கோ, அப்துல்ரகுமான், சதா.பத்மனாபன், பி. செல்வகுமார் உள்ளிட்ட ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
நிறைவாக செயலர் ஜி. முத்துசாமி நன்றி கூறினார்.