முகப்பு
திருவாரூர்

விவசாயிகள், மீனவர்களுக்கானநிவாரணத்தை வழங்க வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்ட விவசாயிகள், மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 13 மே 2013, 1:46 am IST
பகிர்:

காரைக்கால் மாவட்ட விவசாயிகள், மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது : கடந்த குறுவை, சம்பா சாகுபடி தண்ணீரின்றி பாதிக்கப்பட்டது. அண்டை மாநிலமான தமிழக அரசு, விவசாயிகளுக்கு தரவேண்டிய நிவாரணத்தை கொடுத்து முடித்துவிட்டது. புதுச்சேரி அரசு அறிவித்தபடி ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

மீனவர்களுக்கு 45 நாள் மீன்பிடித் தடை காலத்தில் வழங்கவேண்டிய நிவாரணமும் கடந்த ஆண்டு முதல் இதுவரை வழங்கப்படவில்லை. அடுத்த 15 நாளில் தடை காலம் முடிடவடையவுள்ளதால் அதற்குள் மீனவர்களுக்கான நிவாரணத்தை புதுவை அரசு வழங்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.