திருவாரூர்

சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 50 பேர் மீது வழக்கு

DIN

திருத்துறைப்பூண்டியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக, திமுகவினர் 50 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் டாஸ்மாக் கடையை மூடக்கோரியும், காமராஜர் சிலை, பழைய பேருந்து நிலையம், ராம மடத்தெரு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் கடந்த வியாழக்கிழமை புதிய பேருந்து நிலையம் அருகில், திமுக சார்பில் அக்கட்சியின் நகரச் செயலர் ஆர்.எஸ். பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, நகரச் செயலர் ஆர்.எஸ். பாண்டியன் உள்பட திமுகவினர் 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT