திருவாரூர்

மாற்றுத்திறனாளிகள் 95.45% தேர்ச்சி

DIN

திருவாரூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரில் 126 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.45 ஆகும்.
திருவாரூர் மாவட்டத்தில் கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், மன வளர்ச்சிக் குன்றியவர்கள் என மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் 132 பேர் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதினர். இதில் 126 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கண் பார்வையற்றவர்கள் 12 பேரும், காதுகேளாதவர்கள் 8 பேரும், உடல் ஊனமுற்றவர்கள் 30 பேரும், மனவளர்ச்சிக் குன்றியவர்கள் 76 பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதன் மொத்த தேர்ச்சி சதவீதம் 95.45 ஆகும். தனித்தனியாக குறிப்பிட்டால் கண் பார்வையற்றவர்கள் 100 சதவீதமும், காது கேளாதவர்கள் 88.9 சதவீதமும், உடல் ஊனமுற்றவர்கள் 100 சதவீதமும், மன வளர்ச்சிக் குன்றியவர்கள் 93.82 சதவீதமும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT