முகப்பு
திருவாரூர்

ஆறுகளில் சீரான நீரோட்டத்தை உறுதி செய்ய வேண்டும்: பொதுப் பணித் துறை மண்டல தலைமைப் பொறியாளர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்ட ஆறுகளில் உள்ள ஆகாயத் தாமரை மற்றும் நெய்வேலி காட்டாமணக்குச் செடிகளை அகற்றி சீரான நீரோட்டத்தை உறுதி செய்ய

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

திருவாரூர் மாவட்ட ஆறுகளில் உள்ள ஆகாயத் தாமரை மற்றும் நெய்வேலி காட்டாமணக்குச் செடிகளை அகற்றி சீரான நீரோட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என பொதுப் பணித் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ஆர். செந்தில்குமார் கூறினார்.
திருவாரூர் மாவட்ட ஆறுகளின் நீர்வரத்து, ஏரிகளின் நீர் மட்டம் குறித்து பொதுப் பணித் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ஆர். செந்தில்குமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். வடூவூர் ஏரியின் நீர் மட்டம், நீர் வரத்து மற்றும் பாசன பகுதிகளையும்,  பாமணி ஆறு மற்றும் கோரையாறு பாசனப் பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர்,  வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இருப்புக் கொள்ளப்பட்டுள்ள மணல் மூட்டைகள், சாக்குகள், சவுக்குக் கட்டைகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது, ஆறுகளில் உள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் நெய்வேலி காட்டாமணக்கு செடிகளை முழுமையாக அகற்றி சீரான நீரோட்டத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும்,  தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பொதுப் பணித் துறை அலுவலர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
தஞ்சை கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் வி. செல்வராசு, தஞ்சை வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அசோகன் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →