முகப்பு
திருவாரூர்

கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கந்துவட்டி வழக்கில் ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கந்துவட்டி வழக்கில் ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
முத்துப்பேட்டையை அடுத்த மங்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன்(52). இவர் உரிய அனுமதியின்றி வட்டித்தொழில் நடத்தி வந்தாராம். இவரிடம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த தனபால் ரூ. 3 லட்சம் கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதற்காக கூடுதல் வட்டி செலுத்தி வந்தாராம். இதுதொடர்பான பிரச்னையில் தனபால் அளித்த புகாரின் பேரில், முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து உதயசூரியனை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →