திருவாரூர்

அதிமுக அணிகளை இணையவிடாமல் பலவீனப்படுத்தவே வருமான வரித்துறை சோதனை

DIN

அதிமுகவின் இரு அணிகளையும் இணையவிடாமல் பலவீனப்படுத்த பாஜகவின் சூழ்ச்சியே வருமான வரி சோதனை என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வரி ஏய்ப்புக்காகத்தான் வருமான வரித் துறை சோதனை நடத்துவதாக அதிகாரிகள் கூறினாலும் அதில் உண்மையில்லை என்பதை பொதுமக்களே விவாதிக்கின்றனர்.  டி.டி.வி. தினகரன் தரப்பை அச்சுறுத்துவதற்கு என்பதைவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தருகின்ற அச்சுறுத்தல் என நான் கருதுகிறேன்.
எடப்பாடி பழனிசாமியும், தினகரன் அணியும் மீண்டும் இணைந்து பலமாகி விடக் கூடாது என்பதற்காக இப்படி சோதனை நடத்தப்படுவதாக நான் கருதுகிறேன்.
அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, மத்திய புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகள் அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கு மத்திய அரசால் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் மக்கள் இந்த அமைப்புகளின் மீது வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைப்பதுடன், அந்த அமைப்புகளை கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது.  எனவே, இந்தப் போக்கை கண்டிக்கிறோம். இவ்வாறான அணுகுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும்.
பிரதமர் மோடி, பணமதிப்பு நீக்கத்தை எதற்காக அறிவித்தாரோ அந்த நோக்கம் எதுவுமே நிறைவேறவில்லை. கருப்புப் பணம்,  கள்ளப்பணம் ஒழிக்கப்படவில்லை, தீவிரவாதம் தடுக்கப்படவில்லை. இந்த திட்டத்துக்கு எதிராக பாஜகவில் உள்ள மூத்த தலைவர்களே கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல், ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் சிறு தொழில்கள் முடங்கிவிட்டன. வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதித்துள்ளனர்.
பொருளாதாரக் கொள்கை தோல்வியடைந்துள்ளது. எனவே, இந்த தோல்வியை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டு மக்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT