திருவாரூர்

மாநில வலு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மன்னார்குடி வீரர் தேசியப் போட்டிக்கு தேர்வு

DIN

மாநில அளவிலான இளையோர் வலு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மன்னார்குடி வீரர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
 திருவள்ளூரில்  நவ.12-ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான இளையோர் வலு தூக்கும் போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்தும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
 இதில், மன்னார்குடி எம்.ஆர்.டி. உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற கீழப்பாலத்தைச் சேர்ந்த பி. கோவிந்தசாமி 66 கிலோ உடல் எடைப் பிரிவில் கலந்துகொண்டு, 680 கிலோ எடையை தூக்கி,  தங்கப்பதக்கம் பெற்றார். மேலும், மிக சிறந்த இரும்பு மனிதர் பட்டத்துடன் சான்றிதழும் கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம், டிசம்பர் மாதம் கோவையில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான இளையோர் வலு தூக்கும் போட்டியில், தமிழ்நாட்டு அணி சார்பில் கலந்துகொள்ள பி.கோவிந்தசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையொட்டி, மாவட்ட பவர் லிப்டிங் சங்கத் தலைவர் எம். அன்வர்தீன், துணைத் தலைவர் துரை.வீரையன், பயிற்சியாளர் ரெத்தினபாலன் உள்ளிட்டோர் பி.கோவிந்தசாமிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT