பள்ளி பரிமாற்றத் திட்ட தொடக்க விழா
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றத் திட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றத் திட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளிக்கு வருகை தந்த எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியைகளை சிறப்பு விருந்தினர்களுடன் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். விழாவில் பள்ளி தலைமையாசிரியர் எம்.எஸ். பாலு தலைமை உரையாற்றினார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ். சூசைரெத்தினம் பேசியது: வெவ்வேறு மாணவர்கள் ஒன்று கூடி பழகுவதன் மூலம் அறிவு, சமூகப் பண்புகள் வளர்கிறது. மேலும், பள்ளி ஆய்வகம், நூலகம், புதிய கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் அறிவாற்றலை மேம்படுத்திக்கொள்ள பள்ளி பரிமாற்றத் திட்டம் பயன்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியை பேராசிரியர் டாக்டர் எம். அப்துல்மாலிக் தொடங்கி வைத்து, கற்றலின் புதிய வழிமுறைகள் பற்றி சிறப்புரையாற்றினார்.
இதில் தமிழாசிரியை கே. மதுராந்தகி, உடற்கல்வி ஆசிரியர் எஸ். ஆனந்தகுமார், எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியைகள் லெ. பிருந்தாதேவி, பு. பத்மாதேவி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியை ஓவிய ஆசிரியர் கே. நேரு தொகுத்து வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் கே. பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை கே. நளினி நன்றி கூறினார்.