முகப்பு
திருவாரூர்

மனநலம் பாதித்தவர் தாக்கி முதியவர் சாவு

மன்னார்குடி அருகே மனநலம் பாதித்தவர் தாக்கியதில் காயமடைந்த முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

மன்னார்குடி அருகே மனநலம் பாதித்தவர் தாக்கியதில் காயமடைந்த முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருமக்கோட்டை பிரதான சாலையைச் சேர்ந்தவர் வி. கேப்டன்(76).  இவர், திருமக்கோட்டை டாஸ்மாக் கடை அருகே செவ்வாய்க்கிழமை நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மேலநத்ததைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவரான வி. அமுதவாசன் (60) கேப்டனை கட்டையால் தாக்கினாராம்.
இதில் காயமடைந்த முதியவர் கேப்டன் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, திருமக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →