திருவாரூர்

சம்பாவுக்கு பயிர்க் கடன், இடுபொருள்கள் வழங்க நடவடிக்கை: கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர்

DIN

திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு சம்பா பணிக்கு பயிர்க் கடன் மற்றும் இடுபொருள்கள் விரைந்து வழங்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் காந்திநாதன் கூறினார்.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள், கள அலுவலர்கள், மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலர்கள், கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள், வேளாண் அலுவலர்கள் கூட்டத்தில் அவர் பேசியது:
மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்துக்குரிய விவசாயப் பணிகள் உரிய காலத்தில் மேற்கொள்ள ஏதுவாக 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் வழங்கப்படும். ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 20 டன் டிஏபி, 20 டன் யூரியா, 5 டன் பொட்டாசு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தேவையான கடன் தொகைகளை உடனுக்குடன் விடுவிக்க கும்பகோணம் மற்றும் தஞ்சை மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கப்படும். புதிய உறுப்பினர்களுக்கு விவசாயக் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் காந்திநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT