முகப்பு
திருவாரூர்

தூக்கிட்ட நிலையில் பெண் சடலம்; கணவர் தலைமறைவு

மன்னார்குடி அருகே  தூக்கிட்ட நிலையில் பெண் சடலமாக கிடந்தார். அவரது கணவர் தலைமறைவாகிவிட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

மன்னார்குடி அருகே  தூக்கிட்ட நிலையில் பெண் சடலமாக கிடந்தார். அவரது கணவர் தலைமறைவாகிவிட்டார்.
கோட்டூரை அடுத்துள்ள ரெகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(45). இவரது மனைவி லில்லி(35). இவர்களுக்கு 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், லில்லி தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் வியாழக்கிழமை சடலமாக கிடப்பதைப் பார்த்தவர்கள் களப்பால் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த, காவல் ஆய்வாளர் பரந்தாமன், லில்லியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இந்நிலையில் செந்தில்குமார் தலைமை மறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து, களப்பால் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →