முகப்பு
திருவாரூர்

காவல்துறையை அறிவோம் நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  காவல் துறையை அறிவோம் நிகழ்ச்சி  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  காவல் துறையை அறிவோம் நிகழ்ச்சி  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் திருமாறன் தலைமை வகித்தார்.
 மன்னார்குடி மாவட்ட ஆசிரியர் பயிற்சி முதல்வர் மாரியப்பன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் குமுதம், நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்  தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  உதவி தலைமையாசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார்.
 காவல் துறையின் பல்வேறு பதவிகளான இரண்டாம் நிலை காவலர்,  முதல் நிலை காவலர், தலைமைக் காவலர்,  நிலைய எழுத்தர்,  உதவி ஆய்வாளர், ஆய்வாளர், துணை கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி,  ஐ.ஜி.  ஏ.டி.ஜி.பி.,  டி.ஜி.பி. போன்றவை குறித்தும் இணையத்தின் வழியாக புகார் பதிவு செய்தல்,  ரசீது பெறுதல், முதல் தகவல் அறிக்கை, புலன் விசாரணை, குற்றப் பத்திரிகை,  ஹலோ போலீஸ்,  காவல்சோதனைச் சாவடிகளின் பயன்கள் போன்றவை குறித்து காவல் துறை துணைகண்காணிப்பாளர் எம்.ஜெபராஜ் பேசினார்.  உதவி ஆய்வாளர்கள் வல்லவராணி, சூர்யா மற்றும் போலீஸார் கலந்துகொண்டனர்.
 நிகழ்வு குறித்த கருத்துகளை ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக் பதிவு செய்தார்.  அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். உடற்கல்வி இயக்குநர் பாலமுருகன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →