கூத்தாநல்லூர் ஆற்றோரத்தின் சுகாதாரக்கேட்டை ஆணையரிடம் காண்பித்த அ.தி.மு.க. பிரமுகர்கள்
கூத்தாநல்லூர் ஆற்றோரத்தின் சுகாதாரக்கேட்டை ஆணையரிடம் அதிமுக பிரமுகர்கள் சுட்டிக்காட்டினர்.
கூத்தாநல்லூர் ஆற்றோரத்தின் சுகாதாரக்கேட்டை ஆணையரிடம் அதிமுக பிரமுகர்கள் சுட்டிக்காட்டினர்.
கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு எதிரேயுள்ள, வெண்ணாற்றின் கரையோரத்தில், கீற்றுக் கொட்டகையில் கூத்தாநல்லூர் நகர அ.தி.மு.க. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் பின்புறத்திலும், ஓரத்திலும் சுகாதாரக் கேடாக இருக்கிறது. அந்த இடத்தை நகரச் செயலாளர் டி.எம்.பஷீர் அகமது தலைமையில், நகர துணைச் செயலாளர் எம்.உதயகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் எல்.எம்.முகமது அஷ்ரப், நகர எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஆர்.ராஜசேகரன் உள்ளிட்டோர், நகராட்சி ஆணையர் புவனேஸ்வரனை அழைத்து வந்து, சுகாதாரக் கேடான இடத்தை காண்பித்தனர். இடத்தைப் பார்த்து விட்டு, உடனே சுத்தம் செய்து தருவதாகக் கூறினார் ஆணையர் புவனேஸ்வரன்.