திருவாரூர்

நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

DIN

நீட் தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருவாரூரில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்களிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், நீட்தேர்வு மூலம் மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது. தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. கட்சியின் மாவட்டச் செயலர் மா. வடிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT