தூய்மை பாரத இயக்கம்
நீடாமங்கலம் வட்டாரத்தில் தூய்மை பாரத இயக்கம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நீடாமங்கலம் வட்டாரத்தில் தூய்மை பாரத இயக்கம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
மத்திய அரசின் அறிவுரைப்படி ஏப். 14 -ஆம் தேதி முதல் மே.5-ஆம் தேதி வரை பல்வேறு துறை மூலம் கிராம ஊராட்சிகளில் "கிராம தன்னாட்சி இயக்கம்' நடத்த தெரிவித்ததைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் உத்தரவுப்படி நீடாமங்கலம் வட்டாரத்தில் 12 ஊராட்சிகளில் புதன்கிழமை அனைத்து குக்கிராமங்களிலும் தெருக்கள் சுத்தம் செய்து குளோரின் மற்றும் சுண்ணாம்பு தூள் தூவப்பட்டு தூய்மை பணிகள் நடைபெற்றன.
குக்கிராமங்களிலுள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மற்றும் சிறு மின்விசைத் தொட்டிகள் சுத்தம் செய்ததுடன் குளோரின் வில்லைகள் சேர்க்கப்பட்டு சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 12 ஊராட்சிகள் திறந்தவெளியில் மலம் ஜலம் கழிக்காத ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கழிப்பறைகள் கட்டிக்கொள்ள தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியின்போது, மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த விருப்பமுள்ளவர்களுக்கு தனிநபர் கழிப்பறை கட்டுவது குறித்து கொத்தனார் பயிற்சியளிக்கப்பட்டது. முன்னதாக, கோவில்வெண்ணி, ஆதனூர் ஊராட்சிகளில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பொதுமக்களிடம் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தூய்மை கேடுகள் குறித்து விளக்கப்பட்டது.
இதில், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ச. ஞானம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ஆர். ரவிச்சந்திரன்,. எஸ்.செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.