முகப்பு
திருவாரூர்

"பரிசு குலுக்கல் திட்டங்களில் சேர்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்'

திருவாரூர் மாவட்டத்தில் பண்டிகை மற்றும் திருவிழா நாள்களை முன்வைத்து வணிக நிறுவனங்கள்,  பரிசு குலுக்கல் திட்டங்கள் நடத்துவது சட்டப்படி

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

திருவாரூர் மாவட்டத்தில் பண்டிகை மற்றும் திருவிழா நாள்களை முன்வைத்து வணிக நிறுவனங்கள்,  பரிசு குலுக்கல் திட்டங்கள் நடத்துவது சட்டப்படி குற்றம் என்பதால், பொதுமக்கள் இந்த திட்டங்களில் சேர்வதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் சில வணிக நிறுவனங்கள் சட்டத்துக்குப் புறம்பாக தங்களுடைய வணிகத்தைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் அனைத்துப் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை முன்வைத்து பரிசுக் குலுக்கல் திட்டங்களை நடத்தி வருகின்றன. பரிசுக் குலுக்கல் நடத்தும் வணிகர்கள் தங்களது பொருள்களின் விலையைக் கூட்டி வழங்குவதோடு, தரமற்ற பொருள்களை விற்பனை செய்வது,  அளவு குறைப்பு, பொருள்களில் கலப்படம் செய்து கலப்படப் பொருள்கள் விற்பனை செய்வது, இருப்பில் உள்ள பழைய பொருள்களை விற்பனை செய்வது உள்ளிட்டவை மூலம் நுகர்வோர்களை ஏமாற்றுகின்றனர்.
 ஜவுளிக் கடை, பெட்ரோல் பங்க், ரியல் எஸ்டேட்,  ஸ்வீட் ஸ்டால்,  வெடிக்கடை போன்றவைகளில் இதுபோன்று ஏமாற்று வேலைகள் பரிசு குலுக்கல் என்ற பெயரில் நடத்தப்படுகின்றன. இது, பரிசுக் குலுக்கல் (தடை) சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டுத் திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டம் 1978, தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் (தடை) சட்டம் 1979 -ன்படி குற்றமாகும்.
எனவே, பொதுமக்கள் இதுபோன்ற பரிசுத் திட்டங்களில் சேர்ந்து ஏமாற வேண்டாம்.

முழு கட்டுரையைப் படிக்க →