முகப்பு
திருவாரூர்

ஆந்திர மாநில சுற்றுலாப் பேருந்து மரத்தில் மோதி விபத்து: 8 பேர் காயம்

திருவாரூர் அருகே வியாழக்கிழமை ஆந்திர மாநில சுற்றுலாப் பேருந்து சாலையோர மரத்தில் மோதியதில் 8 பேர் காயமடைந்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

திருவாரூர் அருகே வியாழக்கிழமை ஆந்திர மாநில சுற்றுலாப் பேருந்து சாலையோர மரத்தில் மோதியதில் 8 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 25 பேர் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர், அங்கிருந்து ஊட்டி செல்வதற்காக சுற்றுலாப் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். பேருந்தை ஆந்திரத்தைச் சேர்ந்த பிரசாத் (45) ஓட்டினார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்து சென்றபோது, எதிரே வந்த ஆட்டோ மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பிரசாத் பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு அலுவலர்கள், போலீஸார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, கோட்டாட்சியர் முத்துமீனாட்சி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து பணிகளைத் துரிதப்படுத்தினர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனம்  மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 
இந்த விபத்தில் காயமடைந்த சிவநாகேஷ்வரன், ரமேஷ், ரமணம்மா, பத்மஜா, சுவாதி உள்ளிட்ட 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →