திருவாரூர்

சாக்கடை உடைப்பை சரி செய்யக் கோரி சாலை மறியல்

DIN

திருவாரூர் அருகே புதை  சாக்கடையில்  ஏற்பட்ட உடைப்பை சரி செய்யக் கோரி சாலை மறியல்  போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் அருகேயுள்ள கேக்கரை செல்லும் சாலையில் புதை சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலை வழியாக அருகிலிருந்த குளத்துக்குச் சென்று  கலப்பதாகவும், இதன் காரணமாக சுகாதாரச் சீர்கேடுகள் மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக  நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் தெரிவித்து அப்பகுதி  மக்கள்  கேக்கரை சாலையில் நகராட்சி பள்ளிவாசல் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த  நகராட்சி அதிகாரிகள் குழாய் சரி செய்து தருவதாக கூறியதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT