முகப்பு
திருவாரூர்

தகவல் பரிமாற்ற மையம் திறப்பு

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் தகவல் பரிமாற்ற மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் தகவல் பரிமாற்ற மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. 
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் செயல்படுத்தப்படும் திட்ட விவரங்கள், திட்டம் தொடர்பான புள்ளி விபரங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பரிமாற்ற மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபால் திறந்து வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தெய்வநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →