திருவாரூர் தேரோட்டம்: ஆயத்தப் பணிகள் தொடக்கம்
திருவாரூர் தேரோட்டத்தையொட்டி, தேரைப் பிரித்துக் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
திருவாரூர் தேரோட்டத்தையொட்டி, தேரைப் பிரித்துக் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆசியாவிலேயே மிக உயரமானத் தேராகக் கருதப்படுகிறது திருவாரூர் தேர். ஆழித் தேரோட்டம் மே மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு தேரோட்ட விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. கடந்த ஆண்டு தேரோட்டம் முடிவடைந்த பிறகு, தேர் பிரிக்கப்பட்டு, தேரடியில் நிறுத்தப்பட்டது. மேலும் அதைச் சுற்றிலும் சாளரத்தைப் பயன்படுத்தி மறைப்புகள் கட்டப்பட்டிருந்தன.
நிகழாண்டுக்கான தேரோட்டத் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. எனினும், மே மாத கடைசியிலோ அல்லது ஜூன் மாதத்திலோ தேரோட்டம் நடைபெறலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, பெரிய தேரை சுற்றிக் கட்டப்பட்டிருந்த மறைப்புகள், சாளரங்கள் பிரிக்கப்பட்டு, தேரைச் சீரமைப்பதற்கான ஆயத்தப் பணிகளைக் கோயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.