முகப்பு
திருவாரூர்

நேரடி நெல் கொள்முதல் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

நேரடி நெல்கொள்முதல் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலையில்லா காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 அக்டோபர் 2018, 7:53 am IST
பகிர்:

நேரடி நெல்கொள்முதல் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலையில்லா காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில், 8-ஆவது மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜெ. மனோகரன் தலைமை வகித்தார். இதில், மாநில பொதுச் செயலாளர் ஆர். வேங்கடபதி பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்டத் துணைத் தலைவர் ஜி. பழனிவேல், சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.பி.கே. பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்: நேரடி நெல் கொள்முதல் நிலையம், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு, ரயில்வே குட்ஷெட், திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். அரசு அறிவித்தபடி, குறைந்தபட்ச ஊதியமாக 50 கிலோ மூட்டைக்கு ரூ.6 வழங்க வேண்டும். ஐ.எல்.ஓ. பரிந்துரைப்படி 55 கிலோ வரை உள்ள மூட்டைகளை மட்டுமே தூக்க அனுமதிக்க வேண்டும். அரசு கிடங்குகளில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். நேரடி நெல்கொள்முதல் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலையில்லா காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு: கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, தலைவராக எம்.பி.கே. பாண்டியன், செயலாளராக கே. கஜேந்திரன், பொருளாளராக ஜெ. மனோகரன் மற்றும் தலா 3 துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், 14 மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.