வஞ்சிக்கப்பட்ட தேசம் திபெத்
திபெத்தின் வரலாற்றை முழுமையாகப் படித்தறிய விரும்புவோர் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் இது.
வஞ்சிக்கப்பட்ட தேசம் திபெத்- மாதவரம் இரா. உதய்பாஸ்கர்; பக். 372; ரூ. 350; அசோக்குமார் பதிப்பகம், சென்னை- 600 051, ✆ 99406 78478.
'வஞ்சிக்கப்பட்ட தேசம்' என்ற தலைப்பே, திபெத்தின் அரசியல், இயற்கை ரீதியிலான பாதிப்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அழகான இமயமலைத் தொடரைக் கொண்ட இந்த தேசம் கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைந்திருப்பதால் இங்கு பிராணவாயு குறைவு. திபெத்தியர்கள் தவிர மற்றவர்கள் இங்கு வாழ்வது சிரமம். சிறப்புமிக்க திபெத்திலிருந்தே சிந்து, பிரம்மபுத்திரா, சீனாவின் மஞ்சள் நதி உள்ளிட்ட பல நதிகள் உற்பத்தியாகி இந்தியாவையும் சீனாவையும் வளப்படுத்துகின்றன.
சுருங்கச்சொன்னால் திபெத் ஒரு குளிர் பாலைவனம். ஹிந்துக்களின் புனித மலையாகக் கருதப்படும் கயிலாய மலையும் இங்குதான் உள்ளது. தற்போது பௌத்த மதமே இங்கு பிரதானம். திபெத் முழுவதும் பௌத்த மடாலயங்கள்தான் கோலோச்சுகின்றன என்பது உள்ளிட்ட திபெத்தின் அடிப்படைத் தகவல்களும் திபெத்தியர்களின் வாழ்வியல் முறைகளும் பிரமிக்க வைக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த தேசத்தை அண்டை நாடான சீனா 1950-இல் தனது ராணுவத்தை அனுப்பி ஊடுருவி, பின்னர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. 14-ஆம் தலாய் லாமா வெளியேற்றம், சீனாவின் வஞ்சகம், தலைநகர் லாஸாவில் மாற்றங்கள், இந்தியாவில் தஞ்சமடைந்த தலாய் லாமா, முன்னாள் பிரதமர் பண்டித நேருவின் நடவடிக்கைகள், தலாய் லாமாவுடன் சந்திப்பு, இந்திய- சீனப் போரின் பாதிப்புகள், அரசியல் விமர்சனங்கள், சீனாவிடமிருந்து திபெத் விடுதலை பெற வேண்டியதன் அவசியம் என பல்வேறு தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.
திபெத்தின் வரலாற்றை முழுமையாகப் படித்தறிய விரும்புவோர் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் இது.