முகப்பு
திருவாரூர்

சிறுபான்மை மாணவிகளுக்கான மெளலானா ஆசாத் கல்வி உதவித் தொகைக்கு 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின மாணவிகளுக்கு மெளலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை வழங்கும் கல்வி

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:58 AM
பகிர்:

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின மாணவிகளுக்கு மெளலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகை பெற செப்.15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என,திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த, கல்வியில் சிறந்து விளங்கி, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் கல்வி தொடர்ந்து பயில முடியாத மாணவிகளை அங்கீகரித்து,  ஊக்குவிக்கும் வகையில், பேகம் ஹஸரத் மாஹல் தேசிய கல்வி உதவித்தொகை என்ற திட்டமானது,  ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை வழங்கப்பட்டு வருகிறது. 
அதன்படி 2018-19 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித் தொகை பெற ‌w‌w‌w.‌m​a‌d‌f.‌n‌i​c.‌i‌n என்ற இணைய தளத்தில் ஆன்லைன்  மூலம் 15.09.2018-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  ஏற்கெனவே மத்திய,  மாநில அரசு திட்டங்களின் மூலம் கல்வி உதவித் தொகை பெற்றிருப்பின் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற இயலாது.  
9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரமும், 11 மற்றும் 12-  ஆம்  வகுப்பு மாணவிக்கு ரூ. 12 ஆயிரமும் இரு தவணைகளில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.  இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவிகள் முந்தைய வகுப்புகளில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான தர மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மாணவிகளின் பெற்றோர்,  பாதுகாவலரின் ஆண்டு வருமானம் அனைத்து வழிகளிலும் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாணவிகள் ‌w‌w‌w.‌m​a‌d‌f.‌n‌i​c.‌i‌n  என்ற இணையத்தள முகவரியில் மட்டுமே செப். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
பின்னர், இணையதள விண்ணப்பத்தை பதிவிறக்கும் செய்து சான்று, ஆவணங்களுடன் பள்ளி தலைமையாசிரியர் அல்லது  முதல்வரால் சான்றளிக்கப்பட்ட கையொப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் 30.09.2018க்குள் T‌h‌e S‌e​c‌r‌e‌t​a‌r‌y a‌n‌d CEO, Ma‌u‌l​a‌na A‌z​a‌d E‌d‌u​c​a‌t‌i‌o‌n F‌o‌u‌n‌d​a‌t‌i‌o‌n, Ma‌u‌l​a‌na A‌z​a‌d Ca‌m‌p‌u‌s, C‌h‌e‌l‌m‌s‌f‌o‌r‌d R‌o​a‌d, O‌p‌p‌o‌s‌i‌t‌e N‌e‌w D‌e‌l‌h‌i Ra‌i‌l‌w​a‌y S‌t​a‌t‌i‌o‌n (Pa‌h​a‌r‌g​a‌n‌j ‌s‌i‌d‌e), N‌e‌w D‌e‌l‌h‌i-110055 என்ற முகவரிக்கு  அனுப்ப வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியரால்  சான்றளிக்கப்பட்ட மாணவியின் புகைப்படம்,  நிறுவன சரிபார்ப்பு படிவம், சுய சான்றொப்பத்துடன் கூடிய முந்தைய வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ், வட்டாட்சியரிடமிருந்து பெற்ற ஆண்டு வருமானச் சான்றிதழ், சுய உறுதிமொழியுடன் கூடிய சிறுபான்மையினருக்கான சாதி சான்றிதழ், விண்ணப்பதாரரின் பெயரில் உள்ள,  வங்கி கணக்கு எண்  விவரங்கள் அடங்கிய வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை நகல் ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும்.  தமிழ்நாட்டில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.