திருவாரூர்

அம்மன் கோயில்களில் ஆவணி கடை ஞாயிறு வழிபாடு

DIN

கூத்தாநல்லூர் அருகேயுள்ள சேகரை திருக்குளம் கீழ்க்கரை மகா மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத கடை ஞாயிறு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இக்கோயிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவந்தன. கடை ஞாயிறு என பக்தர்களால் அழைக்கப்படும் ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து இரவில் சந்தனம், தயிர், பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட  திரவியங்களால் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், மரக்கடை தாமரைக்குளம் அருகேயுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், கடை  ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சந்தனம், தயிர், பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, அன்ன வாகனத்தில் மாரியம்மன் வீதியுலாவும், இரவில் தீ மிதிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் பரம்பரை தர்ம கர்த்தா எம்.சுப்ரமணியன், நாட்டாமை ஆர்.சின்னையன்  உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT