திருவாரூர்

நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் சகோதரர்கள் இருவர் காயம்

DIN

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற நரிக்குறவர் தவறி விழுந்ததில் அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில், சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சகோதரர்கள் இருவர் காயமடைந்தனர்.
மன்னார்குடியை அடுத்த பாமணி நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜி. சுந்தரம் (41). இவர், தனது மாமனார் ஆர். தங்கையனுக்குச் சொந்தமான உரிமம் புதுப்பிக்கப்படாத நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அவர், தென்கரைவயல், செருமங்கலம் சாலையில் சென்றபோது,  முன்னால் சென்ற சைக்கிளை முந்திச் செல்ல முயன்றாராம். அப்போது, நிலைதடுமாறி சுந்தரம் கீழே விழுந்ததில் அவர் வைத்திருந்த துப்பாக்கியின் விசை அழுத்தப்பட்டு, குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதில், சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தென்கரைவயல் பிரதான சாலையைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன் மகன்கள் பாலமுரளி (14), செல்வபாலாஜி (12) ஆகியோர் மீது குண்டு பாய்ந்ததில் இருவரும் காயமடைந்தனர். அப்போது, அந்த வழியாக வந்தவர்கள், சுந்தரத்தை தாக்கினராம். இதனால், அவரும் காயமடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மன்னார்குடி ஊரக காவல் நிலையப் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து, 3 பேரையும் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
 பின்னர், பாலமுரளி, செல்வபாலாஜி ஆகியோர் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 
இந்ச சம்பவம் தொடர்பாக, நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சுந்தரத்தை போலீஸார் கைது செய்தனர். குண்டு பாய்ந்து காயமடைந்த சகோதரர்களில் பாலமுரளி மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 9 -ஆம் வகுப்பும், செல்வபாலாஜி தென்கரைவயலில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT