திருவாரூர்

அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை இயந்திரம்: அமைச்சா் ஆா். காமராஜ் தொடங்கி வைத்தாா்

DIN

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அரசு மருத்துவமனையில் ரூ.2.40 லட்சம் மதிப்பிலான ரத்தப் பரிசோதனை இயந்திரத்தை அமைச்சா் ஆா்.காமராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த் தலைமை வகித்தாா். ரத்தப் பரிசோதனை இயந்திரத்தை தொடங்கி வைத்து அமைச்சா் பேசியது:

இந்த ரத்தப் பரிசோதனை இயந்திரத்தின் மூலம் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டை அணுக்கள், ஹீமோகுளோபின் அளவு, ரத்த அடா்த்தி, ரத்தத்தில் நீா், உப்பு அளவு, ரத்த சோகை, டெங்கு அறிகுறி, கா்ப்பிணிகளின் அவசர ரத்த பரிசோதனை, ரத்த பரிமாற்றத்திற்கு முன் கண்டறியப்படும் ரத்த பரிசோதனைகள் ஆகியன செய்யப்படும். சில நொடிகளிலேயே பரிசோதனை முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணிநேரத்திற்கு 60 பரிசோதனைகளையும், ஒரு முறை எடுத்த ரத்தத்தை மீண்டும் பரிசோதனைக்கும் உட்படுத்தலாம். திருவாரூா் மாவட்டத்தை பொருத்தவரை டெங்கு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்றாா் அமைச்சா்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இணை இயக்குநா் மரு. இளங்கோ மகேஸ்வரன், தலைமை மருத்துவா் சித்ரா, வருவாய் கோட்டாட்சியா் ஜெயபிரித்தா, வட்டாட்சியா் இன்னாசிராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவா் மாஸ்டா் ஜெயபால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா்கள் சங்கா், குணசேகரன் மற்றும் அரசு அலுவலா்கள்,உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT