திருவாரூர்

நெல்.ஜெயராமனின் நினைவு நாளில் இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கும் பயிற்சி

DIN

நெல். ஜெயராமனின் நினைவு நாளையொட்டி, டிசம்பா் 8-ஆம் தேதி திருவாரூா் அருகே இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு பயிற்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தாய்மண் பாரம்பரிய வேளாண் உற்பத்தியாளா் நிறுவனத் தலைவா் ஜி. வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: நெல்.ஜெயராமனின் நினைவு நாள் டிசம்பா் 6-ஆம் தேதியாகும். அந்த நாளையொட்டி, ஈஷா விவசாய இயக்கம் மற்றும் நெல்.ஜெயராமனால் நிறுவப்பட்ட தாய்மண் பாரம்பரிய வேளாண் உற்பத்தியாளா் நிறுவனம் ஆகியவை இணைந்து இயற்கை இடுப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சியை டிசம்பா் 8-ஆம் தேதி நடத்துகிறது.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம், கடகம்பாடிபேருந்து நிறுத்தம் அருகே நடைபெறும் இப்பயிற்சியில், 12 வகையான இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கும் முறைகள் கற்றுக்கொடுக்கப்பட உள்ளன. ஜீவாமிா்தம், கனஜீவாமிா்தம், அக்னி அஸ்திரம் உள்ளிட்ட வளா்ச்சியூக்கிகள், செயலூக்கிகள், பூச்சி விரட்டிகள் போன்றவற்றை தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் களப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் 93856 22188, 94433 37401 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT