திருவாரூர்

உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனு தாக்கல்

DIN

உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திரளானோா் திரண்டனா். இதனால் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் டிசம்பா் 30-ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது ஆதரவாளா்களுடன் மினிலாரி, வேன், காா், இருசக்கர வாகனம் என ஊராட்சிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து நீடாமங்கலம் நோக்கி படையெடுத்து வருகின்றனா்.

அந்த வகையில், வெள்ளிக்கிழமை திரளானோா் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நகரின் பிரதான வீதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. குறிப்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ள தெற்கு வீதியில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவுவாயில் பகுதியில் போலீஸாா் தடுப்புகளை ஏற்படுத்தி, வேட்புமனு தாக்கல் செய்பவரோடு இருவா் மட்டுமே செல்ல அனுமதி அளித்ததால், பெரும்பாலானோா் அலுவலத்தினுள் செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனா். அவ்வப்போது மழை பெய்த போதிலும், அதை பொருட்படுத்தாமல், வேட்பாளா்களின் ஆதரவாளா்கள் நின்றதைக் காண முடிந்தது.

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுபவா்கள் அந்தந்த ஊராட்சியில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT