திருவாரூர்

வீட்டுவரி உயர்வு பற்றி கவலைப்பட வேண்டாம்: அமைச்சர் ஆர். காமராஜ்

DIN

வீட்டு வரி உயர்வு குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகத்தை அமைச்சர் ஆர். காமராஜ் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பேசியது: 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு மக்களின் அடிப்படைத் தேவைகளை  அறிந்து, நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சின்ன சிங்கப்பூர் என அழைக்கக்கூடிய பெருமைமிக்க கூத்தாநல்லூரில், ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம், இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பேரூராட்சியாக இருந்த கூத்தாநல்லூர் 1994-ஆம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா கடைசி கோப்பு கையெழுத்தாக 5 இடங்களை வட்டங்களாக தரம் உயர்த்தினார். அதில் 3-ஆவது இடமாக கூத்தாநல்லூர் இருந்தது.
இக்கட்டடம் 751 சதுர மீட்டர் பரப்பளவில், அதாவது 8,037 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூத்தாநல்லூர் நகராட்சியில் வீட்டுவரி உயர்வு குறித்து ஜமாத்தார்கள் என்னிடம் தெரிவித்தனர். நானும் அதை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். உடனே அவர் உள்ளாட்சித் துறை அமைச்சரை அழைத்துப் பேசினார். வீட்டுவரி உயர்த்தப்பட்ட 2,500 வீடுகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கு நான் முழுப்பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சிக்கு, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) எஸ். பால்துரை தலைமை வகித்தார். நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே. கோபால் முன்னிலை வகித்தார். 
ஆணையர் சோ. புவனேஸ்வரன் வரவேற்றார். வட்டாட்சியர் எஸ். செல்வி, நகர பிரமுகர்கள், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொறியாளர் நா. சந்திரசேகரன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT