அரசுப் பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் சீர்வரிசை
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் இன்பவேணி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சூசைரெத்தினம் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சாந்தி அனைவரையும் வரவேற்றார். பள்ளிக்குத் தேவையான மேஜை, நாற்காலி, எழுதுபொருள்கள், குடிநீர் கேன் உள்ளிட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கடை வீதியில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து, பள்ளிக்கு வழங்கினர். பின்னர், பள்ளியின் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலியபெருமாள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர் .