திருவாரூர்

அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல்

DIN


திருத்துறைப்பூண்டி அருகே அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரி சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம், நெடும்பலம் கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், பாகுபாடின்றி அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் அப்பகுதியில் உள்ள கிழக்குகடற்கரை சாலை பகுதியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியலால் வேதாரண்யம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் நிகழ்விடத்துக்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT