ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி, திருவாரூர் அருகேயுள்ள திருக்காரவாசலில் மார்க்சிஸ்ட்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி, திருவாரூர் அருகேயுள்ள திருக்காரவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் தொடங்கி ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலமாக ஷேல் மற்றும் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு சர்வதேச ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதைக் கண்டித்தும், திட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் திருக்காரவாசல் ஊராட்சி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, திருக்காரவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. ரங்கசாமி, பி.ஆர். சாமியப்பன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் என். இடும்பையன், மாதர் சங்க மாவட்டச் செயலர் பா. கோமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.